Home Featured கலையுலகம் ரேதா (REDHA) திரைப்படம் வெளியீடு – பங்கேற்பாளர்களுக்கு பெர்சமா (PERSAMA) அழைப்பு!

ரேதா (REDHA) திரைப்படம் வெளியீடு – பங்கேற்பாளர்களுக்கு பெர்சமா (PERSAMA) அழைப்பு!

1360
0
SHARE
Ad

redha (1)கோலாலம்பூர் – ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் ஆட்டிசம் விழிப்புணர்வு மாதமாகக் கருதப்பட்டு வருகின்றது. இந்த மாதத்தில் உலக அளவில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நமது நாட்டிலும், ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மலேசியாவின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் கோலாலம்பூர் இரட்டை கோபுரம் நீல நிறத்தில் ஒளிரச் செய்யப்பட்டது.

இந்நிலையில், நாட்டிலுள்ள ஆட்டிசம் தொடர்பான அமைப்புகளும் பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்று தான் “ரேதா” என்ற ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படம். நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு துங்கு மோனா ரிசா என்ற மலேசிய இயக்குநர் இதனை உருவாக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

redhamovie_31032016_620_465_100இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, உலக ஆட்டிச தினத்தன்று தலைநகர் ஜிஎஸ்சி பெவிலியனில் நடந்த அறிமுக நிகழ்வில் திரையீடு கண்டது.

பொதுமக்களிடையே ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோல்டன் ஸ்க்ரீன் சினிமாஸ் (ஜிஎஸ்சி), எம்பிஓ சினிமாஸ் ஆகியவற்றுடன் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் துங்கு மோனா ரிசா.

பெர்சமா (Pertubuhan Sayang Autisme Malaysia- PERSAMA)

Thila laxman 1நாடறிந்த பாடகியும், பெர்சமா அமைப்பின் தலைவருமான திலா லக்‌ஷ்மண் ஒவ்வொரு ஆண்டும், ஆட்டிசம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருபவர்.

கடந்த ஆண்டு, திலா லக்‌ஷ்மண் தலைமையில்,  LIUBA (LIGHT IT UP BLUE FOR AUTISM AWARENESS) என்ற பெயரில் ஆட்டிசம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டவர்கள் நீல நிறத்தில் உடை அணிந்ததோடு, நீல நிறத்தில் மெழுவர்த்திகள் ஏந்தியும் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

அதே மாதத்தில், ‘ஜனனம் 2.0’ ஆட்டிசம் விழிப்புணர்வுப் பாடலையும் வெளியிட்டார் திலா லக்‌ஷ்மண்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி, ஜிஎஸ்சி என்யு செண்டரில் ( GSC NU Sentral), இரவு 8 மணியளவில் ‘ரேதா- REDHA’ திரையீடு காணவுள்ளது.

பெர்சமாவிற்கு நிதிதிரட்டும் வகையில், அதில் பங்குபெற விரும்பும் நன்கொடையாளர்களுக்கு பெர்சமா அழைப்பு விடுத்திருக்கின்றது. டிக்கெட் விலை 100 ரிங்கிட் மட்டுமே.

கலந்து கொள்ள விரும்புபவர்கள் நேரடியாக திலா லக்‌ஷ்மணை அவரது பேஸ்புக் பக்கத்தின் (Thila Laxshman) வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம் அல்லது (+60183980430) என்ற கைப்பேசி எண்ணிற்கும் அழைக்கலாம்.

– ஃபீனிக்ஸ்தாசன்