Home Featured நாடு காஜாங் நகரில் ‘தென்றல்’ வாசகர் திருவிழா!

காஜாங் நகரில் ‘தென்றல்’ வாசகர் திருவிழா!

1361
0
SHARE
Ad

Vidyasagar-chandran-Thenralகாஜாங் – நாட்டின் முக்கிய வார இதழ்களில் ஒன்றாக தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருப்பது வித்யாசாகரை (படம்) ஆசிரியராகக் கொண்டு அவரது படைப்பாக்கத் சிந்தனையில் வெளிவரும் ‘தென்றல்’ வார இதழ். இந்த வார இதழ் வருடம் தோறும் வாசகர் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

அவ்வகையில் அதன் 13-ஆம் ஆண்டு வாசகர் திருவிழா மே 1-ஆம் தேதி காஜாங் பிரஸ்கோட் (‘PRESCOTT’) ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது.

தமிழ்ச்சாதனையாளர் விருது – சிறுகதை, கவிதை பரிசளிப்பு – வாசகர்கள் கௌரவிப்பு – ‘தென்றல்’ விமர்சனம் – கவியரங்கம் – ஆடல், பாடல், நடிப்பு ஆகிய உற்சாகங்களுடன் – ‘சிறந்த உள்ளூர் கலைஞர்’ விருதளிப்பும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.

#TamilSchoolmychoice

Thenral-vasagar thiruvishaமுதன் முறையாக தலைநகருக்கு வெளியே, காஜாங்கில் நடைபெறும் இவ்விழாவில் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். ஆடல் பாடல்  உணவு உபசரிப்போடு  பகல் 12.00  மணிக்குத் தொடங்கும் இவ்விழாவிற்கு, வாசகர்கள் திரளானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்த விபரங்கள் தெரிந்துகொள்ள வாசகர் இயக்கத் தலைவர் தென்னரசுவை 016-6224348 என்ற எண்களில் அழைக்கலாம்!