Home Featured தமிழ் நாடு இன்றுமுதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் கருணாநிதி!

இன்றுமுதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் கருணாநிதி!

589
0
SHARE
Ad

karunanidhiசென்னை – தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி இன்று தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். சட்டசபை தேர்தலில் தி.மு.க. –காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.

இதில் தி.மு.க. 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும், புதிய தமிழகம் கட்சி 4 தொகுதிகளிலும், மக்கள் தே.மு.தி.க. 3 தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப்படை, விவசாய தொழிலாளர் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர் ஏற்கனவே தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (சனிக்கிழமை) மாலை தனது தேர்தல் பிரச்சாரத்தை சென்னை சைதாப்பேட்டையில் இருந்து துவக்குகிறார்.