Home Featured தமிழ் நாடு சரத்குமாருக்கு முன்வரிசை ஸ்டாலினுக்குப் பின் வரிசையா? – கருணாநிதி கொந்தளிப்பு!

சரத்குமாருக்கு முன்வரிசை ஸ்டாலினுக்குப் பின் வரிசையா? – கருணாநிதி கொந்தளிப்பு!

951
0
SHARE
Ad

Stalinசென்னை – இன்று நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு பின் வரிசை தரப்பட்டிருந்தது.

இதனை அறிந்து மிகவும் ஆத்திரமும், வருத்தமும் அடைந்துள்ள திமுக தலைவர் மு.கருணாநிதி, தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதா என்றும் திருந்தப்போவதில்லை என்ற குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

500256015karunanithi111_28“ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்!”

“முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலேயே பிறவிக்குணத்தை விடாத ஜெயலலிதாவின் பழி வாங்கும் போக்கு!”

“23-5-2016 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு – அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு – அமர வைத்து வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்!” – இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.