Home Featured நாடு “மக்களுக்காகப் போராடுங்கள்; மகாதீருக்காக வேண்டாம்” – எதிர்கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து!

“மக்களுக்காகப் போராடுங்கள்; மகாதீருக்காக வேண்டாம்” – எதிர்கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து!

590
0
SHARE
Ad

????????????????????புத்ராஜெயா – மக்களுக்காகப் போராடுங்கள், மாறாக துன் டாக்டரின் மகாதீர் மொகமட்டின் திட்டங்களின் படி போராடாதீர்கள் என எதிர்கட்சிகளை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமரான மகாதீர் மொகமட்டுடன் இணைந்து பிகேஆர் தலைவர்கள் பணியாற்றி வருவது குறித்து கடந்த வாரம் தான் எச்சரிக்கைக் கடிதம் எழுதியதையும் அன்வார் ஒப்புக் கொண்டுள்ளார்.

“அது ஆரம்பநிலையில் இருந்தாலும் கூட, தலைவர்களுக்காக (கடிதம்) எழுதப்பட்டது. இப்போது அது பரவலாக வெளியாகிவிட்டது. மக்கள் அதைப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை கூட்டரசு நீதிமன்றத்திற்கு காவல்துறைப் பாதுகாப்புடன் வரும் போது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஓரினப்புணர்ச்சி வழக்கில், அவரது மறு ஆய்வு மனு மீதா வழக்கு மேலாண்மைக்காக அன்வார் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.