Home Featured உலகம் தாய்லாந்து பள்ளி விடுயில் தீ விபத்து – 17 மாணவிகள் பலி!

தாய்லாந்து பள்ளி விடுயில் தீ விபத்து – 17 மாணவிகள் பலி!

587
0
SHARE
Ad

fire school in northern thailandபாங்காக் – தாய்லாந்தில் பள்ளி விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 17 மாணவிகள் உடல் கருகி பலியாகியுள்ளனர். தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள வியாங் பா பாவ் மாவட்டத்தில் பிதாகியட்ர் வித்யா என்ற பள்ளி அமைந்துள்ளது.

அந்த பள்ளியில் பழங்குடியினத்தை சேர்ந்த 6 முதல் 13 வயது வரையிலான மாணவிகள் படித்து வருகிறார்கள்.  பள்ளி வளாகத்தில் மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. அந்த விடுதியில் 38 மாணவிகள் தங்கியிருந்தனர்.

thailand-school-fire-exlargeஇந்நிலையில் நேற்று இரவு திடீர் என விடுதில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது விழித்திருந்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்ததால் தப்பித்துக் கொண்டனர். தூங்கிக் கொண்டிருந்த மாணவிகள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

fire1_0இந்த விபத்தில் 17 மாணவிகள் உடல் கருகி பலியாகியுள்ளனர். 5 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 2 மாணவிகளை காணவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மீட்பு பணிகள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடந்தது.