சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 3.30 மணி நிலவரம்) இன்று முதலமைச்சராகப் பதவியேற்றதும் உடனடியாக தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா தனது பணிகளைத் தொடங்கினார். முதல் கட்டமாக இன்று 5 கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அங்கீகாரமாகும்.
அடுத்து அவர் கையெழுத்திட்ட 4 கோப்புகளில், தாலிக்கு 8 கிராம் வழங்கும் திட்டம், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் உத்தரவு, 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு அதனை இலவசமாக வழங்கும் திட்டம், மற்றும் டாஸ்மாக் எனப்படும் மதுபான விற்பனைக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்கும் திட்டம் ஆகியவை அடங்கும்.
காலை 10.00 மணிக்குத் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் இனி நண்பகல் 12.00 மணிக்குத்தான் திறக்கும்.