கடந்த ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினக் கொண்டாட்ட மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அனைத்துலகத் தமிழர் பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்த ஸ்டாலின், தொடர்ந்து நிகழ்த்திய உரையில் தமிழ் மொழி, நாட்டுப்புறக் கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்களைக் கொண்டு நேரடியாகப் பயிற்றுவிக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என ஸ்டாலின் தனதுரையில் அறிவித்தார்.
உலக நாடுகளில் இருந்து பல தலைவர்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.