Home Featured நாடு மாமன்னர் பிறந்த நாள்: விருதுகள் பெறும் இந்தியப் பிரமுகர்கள்! (கூடுதல் தகவல்கள்)

மாமன்னர் பிறந்த நாள்: விருதுகள் பெறும் இந்தியப் பிரமுகர்கள்! (கூடுதல் தகவல்கள்)

960
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ வீரசிங்கம் டான்ஸ்ரீ விருதும், மஇகா தலைமைச் செயலாளர் சக்திவேல் அழகப்பன் டத்தோ விருதும் பெறுகின்றனர்.

மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு மொத்தம் 1,546 பிரமுகர்கள் விருதுகள் பெறுகின்றனர். 52 பேர் டான்ஸ்ரீ என்னும் பட்டத்தைக் கொண்ட விருதைப் பெறுகின்றனர்.

Sakthivel-veerasingam-palany-kings awards-நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விருது பெறும் ஒத்திகையின் போது வீரசிங்கம், டெனிசன் ஜெயசூரியா, டாக்டர் பாலன், சக்திவேல் ஆகியோர் (படம்: நன்றி  – டெனிசன் ஜெயசூரியா முகநூல் பக்கம்)

#TamilSchoolmychoice

மாமன்னர் பிறந்த நாளில் விருதுகள் பெறும் மற்ற இந்தியப் பிரமுகர்களில் சிலர் பின்வருமாறு:

  • மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ நல்லா டான்ஸ்ரீ விருது பெறுகின்றார்.
  • டத்தோ பூவன் என வணிக வட்டாரங்களில் அறிமுகமான என்.பூவேந்திரன் டான்ஸ்ரீ விருது பெறுகின்றார். இவருக்குரிய டான்ஸ்ரீ விருது மைபிபிபி கட்சி சார்பாக வழங்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அறிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வணிகப் பிரமுகரும் மனித வள ஆற்றல் துறை நிபுணருமான டத்தோ டாக்டர் ஆர்.பாலன் டான்ஸ்ரீ விருது பெறுகிறார். இவர் எஸ்.எம்.ஆர்.டி. ஹோல்டிங்ஸ் என்ற மனித வள ஆற்றல் நிறுவனத்தின் தலைவரும், சைபர்ஜெயா மருத்துவ, விஞ்ஞானப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமாவார்.Veerasingam-palany-King awards-rehearsal-நேற்று நடைபெற்ற மாமன்னர் விருது பெறுவதற்கான ஒத்திகையின்போது வீரசிங்கம், டெனிசர் ஜெயசூரியா, டத்தோ பாலன் ஆகியோர் (படம் நன்றி: டெனிசன் ஜெயசூரியா முகநூல் பக்கம்)
  • டத்தோஸ்ரீ ரஞ்சிட் சிங் – நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களில் ஒருவரான ரஞ்சிட் சிங், மலேசிய பங்குச் சந்தை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராவார்.
  • டத்தோ டாக்டர் சுந்தரன் அண்ணாமலை – அண்மையில் சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான சுந்தரன் அண்ணாமலைக்கு பிஜேஎன் எனப்படும் டத்தோ விருது மரணத்துக்குப் பின் வழங்கப்படுகின்றது.
  • டத்தோ கெவின் மொராய்ஸ் – படுகொலை செய்யப்பட்ட அரசாங்க வழக்கறிஞரான கெவின் மொராய்சுக்கும் பிஜேஎன் எனப்படும் டத்தோ விருது மரணத்துக்குப் பின் வழங்கப்படுகின்றது.
  • டத்தோ டென்னிஸ் சந்திரதீபம் – லத்திமர் கொர்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டென்னிஸ் சந்திரதீபம் லத்திமர் டத்தோ விருதைப் பெறுகின்றார்.
  • டத்தோ ஹார்மிண்டர் சிங் டாலிவால் – மேல்முறையீட்டு நீதிமன்ற (Court of Appeal) நீதிபதி ஹார்மிண்டர் சிங் டாலிவால் பிஜேஎன் எனப்படும் டத்தோ விருதைப் பெறுகின்றார்.
  • டாக்டர் கே.ஏ.வேலாயுதம் – துவாங்கு ஜஃபார் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் டாக்டர் கே.ஏ.வேலாயுதம் ஜேஎம்என் என்னும் விருதைப் பெறுகின்றார்.
  • டத்தோ ஏ.தெய்வீகன் – பினாங்கு மாநில காவல் துறைத் துணைத் தலைவர் துணை ஆணையர் டிசிபி டத்தோ ஏ.தெய்வீகன் ஜேஎம்என் என்ற விருதைப் பெறுகின்றார்.
  • ஏசிபி ஆர்.முனுசாமி – கேஎம்என் எனப்படும் விருதைப் பெறும் 224 பிரமுகர்களில் செந்தூல் வட்டார போலீஸ் தலைமையகத்தின் தலைவர் (ஓசிபிடி) ஏசிபி ஆர்.முனுசாமியும் ஒருவராவார்.