Home Featured தமிழ் நாடு தமிழக சட்டப் பேரவை: முதல் நாள் சுவாரசியங்கள்!

தமிழக சட்டப் பேரவை: முதல் நாள் சுவாரசியங்கள்!

515
0
SHARE
Ad

tamil-nadu-secretariat-tamil-nadu-assembly_சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நேற்று முதல் முறையாகக் கூடிய தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற சில சுவாரசியங்கள்:

கருணாநிதி வரவில்லை

  • நேற்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள். அதன் காரணமாகவோ என்னவோ அவர் சட்டப் பேரவைக்கு வரவில்லை.

பேரவைத் தலைவர் தனபால் – துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்

  • பேரவைத் தலைவராக தனபாலும், துணை தலைவராக பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
#TamilSchoolmychoice

ஓபிஎஸ்-ஸ்டாலின் இணைந்து பேரவைத் தலைவரை அழைத்துச் சென்றனர்

  • பாரம்பரிய நடைமுறைப்படி, அதிமுக அவை முன்னவர் ஓ.பி.எஸ் பன்னீர் செல்வமும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் தனபாலை அழைத்துச் சென்று அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

10.00 மணிக்குத் திருக்குறளோடு தொடங்கிய சட்டப் பேரவை

  • காலை 9.55 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவைக்குள் நுழைய, முன்னதாக, அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். சரியாக காலை 10 மணிக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பேரவைக்கு வந்து, திருக்குறள் வாசித்து பேரவையைத் தொடக்கி வைத்தார்.

ஜெயலலிதா உரை

  • முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, “ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும். ஒரு பக்கம் சிதைந்திருந்தால், அந்தக் காசு செல்லாக்காசாகிவிடும் என்றார் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் பெயரையும், அவரது உருவத்தைக் கட்சிக் கொடியிலும் தாங்கியிருக்கும் அதிமுக அதற்கேற்ப செயல்படும்” என்ற உறுதிமொழியைத் தந்தார்.

ஸ்டாலின் உரை

  • ஸ்டாலின் பேசும்போது, “சபாநாயகர் ஆளும் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் அனைவருக்கும் பொதுவானவராகி விடுகின்றார். சபாநாயகர் கட்சி சார்பின்றி செயல்பட வேண்டும். நூற்றாண்டு காணப்போகும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும். எதிரிக்கட்சியாக செயல்படாது’’ என்று கூறினார்.

முதல்வர் காலில் விழுந்து துணை சபாநாயகர்

  • பேரவைத் துணைத் தலைவராக (துணை சபாநாயகராக) தேர்வு பெற்ற பொள்ளாச்சி ஜெயராமன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்து, அவரது காலில் விழுந்து வணங்கினார். உடனே, முதல்வர் ஜெயலலிதா, தன் கையை நீட்டி, காலில் விழ வேண்டாம் என்பதுபோல் சைகை காட்டினார். ஆனால், பொள்ளாச்சி ஜெயராமன் அதை கண்டுகொள்ளவில்லை.

பேரவை ஒத்திவைப்பு

  • முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்ததும் பேரை மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது