Home Featured இந்தியா “இந்தியா – மலேசியா நட்புறவு வலுப்படுத்தப்படும்” – சாஹிட் தகவல்!

“இந்தியா – மலேசியா நட்புறவு வலுப்படுத்தப்படும்” – சாஹிட் தகவல்!

2279
0
SHARE
Ad

Ahamd Zahid Hamidi-delhi-meeting high com officialsபுதுடெல்லி – இந்தியா, மலேசியா இடையிலான வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை மேம்படுத்தப்படும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று புதுடெல்லியில் மலேசிய செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 1957-ம் ஆண்டு முதல் இந்தியா – மலேசியா இடையில் வலுவான நட்புறவு இருந்து வருகின்றது. அடுத்த ஆண்டு தற்செயலாக ஆசியான் – இந்தியா கருத்தரங்கு நடைபெறவுள்ளது. அதில் 60-ம் ஆண்டைக் கொண்டாடவுள்ளோம். இரு நாட்டு அரசாங்கமும், மக்களும் தங்களது நட்புறவை வலுப்படுத்த இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.