Home Featured கலையுலகம் 11 நாட்களில் 248 கோடி வசூல் – “சுல்தான்” சாதனை!

11 நாட்களில் 248 கோடி வசூல் – “சுல்தான்” சாதனை!

784
0
SHARE
Ad

Sultan-Movie-salman-anushkaமும்பை – சல்மான் கான் நடிப்பில் மல்யுத்த விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட சுல்தான் திரைப்படம் 11 நாட்களில் 248 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பதன் மூலம், இதுவரை வெளிவந்த இந்தியப் படங்களிலேயே நான்காவது மிகப் பெரிய வசூல் சாதனைப் படமாகத் திகழ்கின்றது.

வெளியிடப்பட்ட மூன்று நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலை வாரிக் கொட்டியதன் வழி, மிகக் குறுகிய காலத்தில் நூறு கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற சாதனையையும் சுல்தான் பெற்றுள்ளது.

இந்தியப் படங்களில் 340 கோடி ரூபாய் வசூலுடன் அமீர் கானின் ‘பிகே’ படம்தான் முதலிடத்தில் இருக்கின்றது. சுல்தான் அதனை முறியடிக்குமா எனக் காத்திருக்கின்றது இந்தியப் படவுலகம்!

#TamilSchoolmychoice