ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் பூப்பந்து (பேட்மிண்டன்) போட்டிகளில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணைந்த இணை (படம்) இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியிருக்கின்றார்கள். சீனாவின் சூ சென் மற்றும் மா ஜின் இணையை இரண்டு நேர் ஆட்டங்களில் (செட்) தோற்கடித்து இவர்கள் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
நாளை புதன்கிழமை இரவு (மலேசிய நேரப்படி) 11.30 மணிக்கு இவர்கள் இந்தோனிசிய இணையான லிலியானா நட்சிர்-தொந்தோவி அகமட் இணையைச் சந்திப்பார்கள். இதில் வெற்றி பெற்றால் மலேசியாவுக்கு முதல் தங்கத்தைக் கொண்டு வரும் விளையாட்டாளர்களாக இவர்கள் திகழ்வார்கள். தோல்வியடைந்தாலும் வெள்ளிப் பதக்கத்தைப் பெறுவார்கள்.
ஒலிம்பிக்சில் ஒரு பதக்கத்தை நோக்கிச் செல்லும் மலேசியாவின் முதல் பூப்பந்து கலப்பு இரட்டையர் இணையாக இவர்கள் திகழ்கின்றார்கள்.