Home Featured நாடு புதிய மாமன்னராக கிளந்தான் சுல்தான் தேர்வு!

புதிய மாமன்னராக கிளந்தான் சுல்தான் தேர்வு!

1080
0
SHARE
Ad

kl11_141016_rajaகோலாலம்பூர் – இன்று நடைபெற்ற மாநில சுல்தான்களின் சிறப்புக்  கூட்டத்தில், புதிய மாமன்னராக கிளந்தான் சுல்தான் சுல்தான் முகமட் வி, 15 -வது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவரது 5 ஆண்டுகள் பதவிக் காலம் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் துவங்குகிறது.

அதேவேளையில், பேராக் சுல்தான் நஸ்ரின் முய்சுதின் ஷா அடுத்த துணை மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நடப்பு பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷாவின் (கெடா சுல்தான்) 5 ஆண்டு கால பதவிக்காலம் வரும் டிசம்பர் 12-ம் தேதியோடு நிறைவடைவதால், சுல்தான்கள் இன்று கூடி, புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.