Home Featured இந்தியா உச்சக்கட்ட பாதுகாப்புடன் கோவாவில் பிரிக்ஸ் 2016 மாநாடு துவக்கம்!

உச்சக்கட்ட பாதுகாப்புடன் கோவாவில் பிரிக்ஸ் 2016 மாநாடு துவக்கம்!

787
0
SHARE
Ad

brics11பானாஜி – கோவா தலைநகர் பானாஜியில் இன்று சனிக்கிழமை தொடங்கும் பிரிக்ஸ் மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

உலகத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை, இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ‘பிம்ஸ்டெக்’ அமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.