Home Featured இந்தியா ‘2030-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்’ – மோடி நம்பிக்கை!

‘2030-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்’ – மோடி நம்பிக்கை!

1023
0
SHARE
Ad

modiதிருப்பதி -ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 104-வது தேசிய அறிவியல் மாநாட்டை (104th Indian Science Congress ) இன்று செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்த, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வரும் 2030-ம் ஆண்டிற்குள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்த மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என உறுதியளித்தார்.

மேலும், அவர் கூறியதாவது:-

“நமது சமுதாயத்தை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும் விஞ்ஞானிகளுக்கு இந்த தேசம் என்றும் நன்றி கடன்பட்டுள்ளது”

#TamilSchoolmychoice

“நமது கட்டமைப்பிலும், மக்களிடத்திலும் இன்று நாம் விதைக்கும் முதலீடுகளின் மூலமாகவும் தான் நாளைய நிபுணர்கள் வருகின்றார்கள்”

“மக்களிடம் வளர்ந்து வரும் ஆசைகளை அறிவியல் பூர்த்தி செய்ய வேண்டும். வரும் 2030-ம் ஆண்டிற்குள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்த மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்”

“பள்ளிக் குழந்தைகளிடம் திட்டங்களையும், கண்டுபிடிப்புகளையும் விதைக்கும் போது அது நம்முடைய கண்டுபிடிப்பு பிரமிடை விரிவுபடுத்தும்”

“நிலைப்புத் தன்மையான வளர்ச்சியை அடைய வீணாக்குதலில் இருந்து செழிப்பாக்கும் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்”

“இந்திய விண்வெளித் திட்டம், இந்தியாவை ஆகச் சிறந்த விண்வெளித் திட்ட நாடுகளில் ஒன்றாக வைத்துள்ளது” – இவ்வாறு நரேந்திர மோடி உரையாற்றினார்.

மோடியின் முழு உரையை இந்த இணைப்பின் வழியாகக் காணலாம்:-

https://www.youtube.com/watch?v=vNCR8PvFkN0