Home Featured தமிழ் நாடு “தேச விரோத செயலுக்குத் துணை போக மாட்டேன்” – போராட்டதிலிருந்து விலகிய ஆதி விளக்கம்!

“தேச விரோத செயலுக்குத் துணை போக மாட்டேன்” – போராட்டதிலிருந்து விலகிய ஆதி விளக்கம்!

918
0
SHARE
Ad

Hiphop tamilaசென்னை – ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டம், சில தரப்பினரின் செயல்களால் திசை மாறி செல்வதாகவும், அதனால் தான் அப்போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டதாகவும் ஹிப்ஹாப் தமிழா ஆதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து ஆதி நேற்று பேஸ்புக் மூலமாக வெளியிட்ட தகவலில், “இந்தப் போராட்டம் தொடங்கியது முதல் அலங்காநல்லூர், சென்னை, கோவை என பல இடங்களில் நான் கலந்து கொண்டேன். ஏனென்றால் அதெல்லாம் அறப்போராட்டங்களாக நடந்தது. ஆனால் கோவையில் நடந்த சில சம்பவங்கள் என்னை மனம் வருந்தச் செய்தது.”

“அங்கே சிலர் திடீரென வந்து எங்க பகுதியில் வந்து பேசுங்க என்றார்கள். என்ன என்று பார்த்தால் அங்கே தேசியக் கொடியை கீழே போட்டு அவமதித்து, இந்தியா என்று கேவலப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார்கள். தேச விரோத செயலுக்கு நான் ஒருபோதும் துணை போக மாட்டேன். அதை அவர்களிடம் தெளிவா சொல்லி விட்டேன். உடனே, “ஹிப்ஹாப் தமிழா நீ உண்மையான தமிழனா இருந்தா இங்கே வந்து போராடு”ன்னு சொல்றாங்க.

#TamilSchoolmychoice

“இன்னொருத்தர், ‘மத்திய அரசு ஹிந்துக்களுக்கே முன்னுரிமை தருகிறது. இஸ்லாமியர்களுக்கு தரவில்லை’ என்றெல்லாம் பேசுகிறார்கள். இதெல்லாம் எனக்கு ஒப்புமை இல்லை. கடந்த ஒருவருடமாக நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை பீட்டாவுடன் இணைத்து கெட்ட வார்த்தைகளைக் கொண்டு எழுத ஆரம்பித்தார்கள். குடும்பப் பெண்கள் உள்ள இடத்தில் திடீரென சில கும்பல்கள் வந்து மோடி, தனித்தமிழ்நாடு என்றெல்லாம் பேசி கூடவே தகாத வார்த்தைகளைப் பேசினார்கள்.மனம் வருந்தி நான் அங்கிருந்து கிளம்பி மதுரைக்கு வந்து விட்டேன்.”

“அதன் பிறகு பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் இதே போல நடந்து கொண்டிருக்கிறது. “பெப்ஸி, கோக் தடை செய்யவில்லையென்றால் நான் செத்து விடுவேன்” என்கிறான். நீ ஏன் வாங்குற? எதற்காக போராடுகிறோம் என்று தெரியாமல் திசை திரும்பி விட்டது. இந்த கூட்டம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. 10 வருட காலமாக கஷ்டப்பட்டு கொண்டு வந்த விஷயத்தை மாணவர்கள் ஒழுங்காக செய்து கொண்டிருந்தார்கள். இதில் திடீரென குட்டியானையில் ஒரு ஆள் ‘தேசியக் கொடியை எரிக்கப் போறேன்” என்று வருகிறார்.ஜல்லிக்கட்டுக்கு போராடும் ஆட்கள் வஉசி பூங்காவில் உள்ளே உட்காந்திருக்கிறார்கள். ஆனால் தேசவிரோத சக்திகள் வெளியில் வேறு விதமாக கூச்சல் செய்து கொண்டிருந்தார்கள். நான் மிகவும் புண்பட்டு விட்டேன்.” என்று ஆதி தெரிவித்துள்ளார்.

ஆதி பேசியுள்ள காணொளியை இங்கே காணலாம்:-