Home Featured இந்தியா நீதிபதி கர்ணனுக்கு எதிராகக் கைது ஆணை!

நீதிபதி கர்ணனுக்கு எதிராகக் கைது ஆணை!

1260
0
SHARE
Ad

karnan-judge

கொல்கத்தா – கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியும், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகக் கருத்துகளைக் கூறி வருபவருமான தமிழ் நாட்டைச் சேர்ந்த கர்ணன் (படம்), நீதிமன்ற அவமதிப்புக்காக கைது செய்யப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சாதிய உணர்வுகளைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு வரும் கர்ணன், உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக – தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக – 14 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்திய சட்டத் துறையில் இதுபோன்ற வழக்கு தொடுக்கப்படுவது இதுதான் முதன் முறை எனக் கருதப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி, கர்ணனைக் கைது செய்ய கொல்கத்தாவிலுள்ள அவரது வீட்டின் முன் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)