Home Featured உலகம் ஆப்கானிஸ்தான் மீது சக்திவாய்ந்த குண்டை வீசியது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தான் மீது சக்திவாய்ந்த குண்டை வீசியது அமெரிக்கா!

1265
0
SHARE
Ad

Motherofbombவாஷிங்டன் – ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில், ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் பகுதியில், ஜிபியு – 43 என்ற மிகப் பெரிய குண்டை வீசியது அமெரிக்கா.

‘குண்டுகளுக்கெல்லாம் தாய்’ என்றழைக்கப்படும் இந்த மிகப்பெரிய குண்டை இதுவரை எங்குமே பயன்படுத்தியதில்லை என்று கூறப்படுகின்றது.

21,000 பவுண்ட் (9,525 கிலோ) எடை கொண்ட அணுசக்தியற்ற அந்த குண்டு, கடந்த 2003-ம் ஆண்டு, ஈராக் போரின் போது முதன் முதலாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை, பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் இருக்கும் ஆச்சின் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கார்ஹார் என்ற பகுதியில் எம்.சி -130 ரக போர் விமானத்தில் மூலம் இந்த வெடிகுண்டு வீசப்பட்டது என பென்டகன் உறுதிப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். அண்மையில் சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.