Home Featured நாடு சிலாங்கூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுமா? – அஸ்மின் பதில் என்ன?

சிலாங்கூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுமா? – அஸ்மின் பதில் என்ன?

25929
0
SHARE
Ad

azmin ali mகோலாலம்பூர் – பிகேஆர் கட்சியுடனானத் தங்களின் அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாக பாஸ் கட்சியின் முடிவையடுத்து, சிலாங்கூர் மாநிலத்திற்கு உடனடித் தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அஸ்மின் அலி இல்லை என்று பதிலளித்திருக்கிறார்.

“இல்லை. உடனடித் தேர்தல் நடத்தும் அளவிற்குப் பிரச்சினை இல்லை. நாங்கள் இன்னும் உறுதியாகத் தான் இருக்கின்றோம்” என்று அஸ்மின் அலி தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் நடைபெற்ற பாஸ் கட்சியின் மாநாட்டில் பிகேஆர் கட்சியுடனானத் தங்களின் அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாக பாஸ் எடுத்த முடிவை கட்சியின் உச்ச ஆட்சிக் குழுவான ஷூரா மன்றம் நேற்று வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டது.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் உள்ள பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற அந்த மன்றத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து சிலாங்கூர் அரசாங்கத்தின் ஆட்சிக் குழுவிலிருந்து பாஸ் கட்சி விலகிக் கொள்ளுமா அதன் மூலம் சிலாங்கூரில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி கவிழுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஷூரா மன்றத்தின் முடிவை அறிவித்த மன்றத்தின் செயலாளர் நிக் முகமட் சவாவி சாலே, இருப்பினும், பிகேஆர் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இன்னும் இருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கிறார்.