Home இந்தியா சென்னை புத்தக கண்காட்சி 2025 – டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை நடைபெறும்

சென்னை புத்தக கண்காட்சி 2025 – டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை நடைபெறும்

264
0
SHARE
Ad

சென்னை : சென்னையில் நடைபெறும் தமிழ் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் விரிவடைந்து வருவதோடு இலட்சக்கணக்கான வாசகர்களையும் ஈர்த்து வருகிறது.

2025-ஆம் ஆண்டுக்கான 48-வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்தக் கண்காட்சி 2025 டிசம்பர் 27, 2024 மாலை 4.30 மணியளவில் தொடங்குகிறது. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைக்கிறார்கள்.

இந்த புத்தகக் கண்காட்சி 17 நாட்கள் நடைபெற்று ஜனவரி 12 (2025) அன்று நிறைவடைகிறது.

#TamilSchoolmychoice

பொது விடுமுறை நாட்களிலும் காலை 11 மணி முதல் மாலை 8:30 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

மொத்தம் 900 தளங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்படுகிறது. அனைத்து விற்பனை மையங்களிலும் நூல்கள் மீது 10% தள்ளுபடி வழங்கப்படும். தமிழ்நாடு பாடப்புத்தகக் கழகம், இந்துச் சமய அறநிலைய வாரியம் உட்பட 10 அரசு நிறுவனங்கள் தங்கள் விற்பனைக் கூடங்களை அமைக்கின்றன.

பல அனைத்துலக நூல் பதிப்பாளர்களும், வெளிநாட்டு தூதரகங்களும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் பங்கு கொள்கின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டணமின்றி கண்காட்சியில் பங்கு கொள்ளலாம்.

கண்காட்சி தொடர்பாக பல சிறப்பு நிகழ்ச்சிகளும் கண்காட்சி வளாகத்தில் நடத்தப்படுகின்றன.