Home வணிகம்/தொழில் நுட்பம் கிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதி மூடுவிழா காண்கிறது

கிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதி மூடுவிழா காண்கிறது

955
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தலைநகரின் மையமாக அமைந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரை ஈர்க்கும் பொதுமருத்துவமனைக்கு வருபவர்கள் கண்கள் நிச்சயம் அந்த மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு எதிரே கம்பீரமாக எழுந்து நிற்கும் பலமாடிகளைக் கொண்ட கிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதியையும் பார்த்திருக்கும்.

கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கே நடந்திருக்கின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த கிராண்ட் சீசன்ஸ் விடுதி எதிர்வரும் பிப்ரவரியோடு மூடுவிழா காணவிருக்கிறது என்பதுதான் சோகம்.

பொதுவாக சீனர்களுக்கு மருத்துவமனைக்கு எதிரில் வீடோ, வணிக வளாகமோ அமைந்தால் அது சரியான வாஸ்து  நிலை அல்ல என எண்ணுவார்கள். அந்த வகையில் ஆசிய நிதி நெருக்கடி மலேசியாவையும் உலுக்கிய 1997 காலகட்டத்தில் 678 அறைகளுடன் கிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதி உருவாகியபோதும் பலருக்கு ஆச்சரியம்.

#TamilSchoolmychoice

எப்படி மருத்துவமனைக்கு எதிரில் இப்படி ஒரு உயர்தர தங்கும் விடுதியை அமைக்க முன்வந்தார்கள் என்று. அந்தக் காரணத்திலோ என்னவோ, கட்டி முடிக்கப்பட்டது முதல் இந்தத் தங்கும் விடுதி நகர மையத்தில் இருந்தாலும் நிறைய அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை.

குறிப்பாக சீனர்களை அதிக அளவில் இந்தத் தங்கும் விடுதியில் பார்க்க முடியாது. மாறாக, அண்மைய ஆண்டுகளில் அதிகமான இந்தியச் சுற்றுப் பயணிகள் தங்கும் விடுதியாக கிராண்ட் சீசன்ஸ் திகழ்ந்து வந்தது.

கிராண்ட் சீசன்ஸ் முற்றாக இடிக்கப்படுமா அல்லது பழைய கட்டடத்திலேயே வேறு ஒரு வணிக மையமாக உருமாற்றப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை,

அண்மையக் காலமாக பல உயர்தரத் தங்கும் விடுதிகள் விற்பனைக்கு வருகின்றன எனத் தெரிவிக்கும் இந்தத் துறை சம்பந்தப்பட்ட வணிக ஆய்வாளர்கள், நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பட்ஜெட் தங்கும் விடுதிகள் எனப்படும் மலிவுக் கட்டண விடுதிகள் முளைத்திருப்பதால் பல சுற்றுப் பயணிகள் கட்டண உயர்வு கருதி பெரிய தங்கும் விடுதிகளுக்குச் செல்வதில்லை.

மலிவுக் கட்டண தங்கும் விடுதிகளில் தூய்மையான சூழல், குறைந்த கட்டணங்கள், எளிமையான அதே சமயத்தில் பயணிகளுக்குப் போதுமான வசதிகள் செய்து தரப்படுவதால், இப்போதெல்லாம் சுற்றுப் பயணிகள் இதுபோன்ற தங்கும் விடுதிகளையே நாடுவதாகக் கூறப்படுகிறது.