Home Featured வணிகம் கோலாலம்பூர் ரினாசன்ஸ் தங்கும் விடுதி 765 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்பனை!

கோலாலம்பூர் ரினாசன்ஸ் தங்கும் விடுதி 765 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்பனை!

749
0
SHARE
Ad

Renaissance-KL-hotel

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகரின் பிரபல ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிகளில் ஒன்றான ரினாசன்ஸ் ஹோட்டல் 765 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதன் உரிமையாளர்களான ஐஜிபி கொர்ப்பரேஷன் பெர்ஹாட் (IGB Corporation Bhd) ரினாசன்ஸ் தங்கும் விடுதியை வெஞ்சுரா இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் (Ventura International Sdn Bhd) என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விற்பனையின் மூலம் ஐஜிபி நிறுவனம், வரிகள் கழிக்கப்பட்ட பின்னர், 85 மில்லியன் ரிங்கிட் இலாபம் அடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டின் மத்தியில் கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கிய ரினாசன்ஸ் தங்கும் விடுதி 506.6 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

இந்த விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபம் தங்கள் நிறுவனத்தின் மற்ற வணிக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் ஐஜிபி நிறுவனம் அறிவித்துள்ளது.