Home Featured இந்தியா ஆச்சரியம்! உலகின் 2-வது நிலை விளையாட்டாளரைத் தோற்கடித்த சிந்து!

ஆச்சரியம்! உலகின் 2-வது நிலை விளையாட்டாளரைத் தோற்கடித்த சிந்து!

647
0
SHARE
Ad

olympics-badminton-sindhu

ரியோ டி ஜெனிரோ – தற்போது ஒலிம்பிக்சில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இந்திய விளையாட்டாளர்கள் குழுவினர் அனைவரும் பாடிக் கொண்டிருப்பது ‘சிந்து’ இராகம்தான்!

ஏறத்தாழ 190 விளையாட்டாளர்கள் பல்வேறு விளையாட்டுகளில் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியுற்று, இதுவரை எந்தப் பதக்கமும் பெறாமல் வெளியேறிக் கொண்டிருக்க, பூப்பந்து விளையாட்டாளர் பி.வி.சிந்து மட்டும் உச்சகட்ட திறனோடும், போராட்ட குணத்தோடும் களத்தில் இன்னும் நின்று கொண்டிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முதல் நிலை பூப்பந்து ஆட்டக்காரர் சாய்னா நேவால் கூட தோல்வி கண்டு வெளியேறிவிட, சற்றும் எதிர்பாராதவிதமாக சிந்து படிப்படியாக முன்னேறத் தொடங்கினார்.

ஆனால் நேற்று செவ்வாய்க்கிழமை உலகின் 10-வது நிலை ஆட்டக்காரரான சிந்து, கால் இறுதி ஆட்டத்தில் உலகின் 2-வது நிலை ஆட்டக்காரரான சீனாவின் வாங் யீஹான்-னைச் சந்திப்பார் என்ற நிலை ஏற்பட்டதுமே இந்தியர்களின் மனக் கோட்டைகள் சரியத் தொடங்கின.

ஆச்சரியம் என்னவென்றால், யாரும் எதிர்பாராதவிதமா இரண்டே நேர் ஆட்டங்களில் 22-20, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் சீன வீராங்கனையைத் தோற்கடித்து தற்போது அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார் சிந்து.

நாளை வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் அரை இறுதி ஆட்டத்தில் ஜப்பான் விளையாட்டாளரைச் சந்திக்கப் போகும் சிந்து, அதிலும் வென்றுவிட்டால், இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை வென்று தருவது உறுதியாகிவிடும்.