Home Featured உலகம் 400 மீட்டர் : கீழே விழுந்தாலும் வெற்றிக் கோட்டைத் தொட்ட மில்லர்!

400 மீட்டர் : கீழே விழுந்தாலும் வெற்றிக் கோட்டைத் தொட்ட மில்லர்!

500
0
SHARE
Ad
Olympics-athletics-400m-women-miller

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் 400 மீட்டர் பெண்களுக்கான ஓட்டத்தில் நேற்று இறுதிச் சுற்றில் பஹாமாவைச் சேர்ந்த ஷாவுனே மில்லர் சற்றே பரபரப்பை ஏற்படுத்தினார்.

முதலாவதாக, ஓடி வந்து கொண்டிருந்த மில்லர் வெற்றிக் கோட்டை எட்டும் நிலையில் திடீரென தடுமாறிக் கீழே விழுந்தார். இருந்தாலும், விடாப்பிடியாக விழுந்து கொண்டிருக்கும்போதே, வெற்றிக் கோட்டை அவர் எட்டித் தொட்டபோது, அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.

கீழே விழுந்தவர் சற்று நேரம் தான் வெற்றி பெற்றோமா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள தரையில் விழுந்த நிலையிலேயே கொஞ்ச நேரம் களைத்துக் கிடந்தார்.

#TamilSchoolmychoice

பின்னர், கண்காணிப்பாளர்கள் அவர் முதலாவதாக வெற்றி பெற்றுத் தங்கம் பெறுகிறார் என அறிவித்த பின்னர் அவர் உற்சாகத்துடன் எழுந்து நடமாடத் தொடங்கினார்.

49.44 வினாடிகளில் ஓடி 400 மீட்டர் போட்டியில் வெற்றி பெற்ற 22 வயது மில்லர்,  நான்கு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற அமெரிக்காவின் அலிசன் பெலிக்ஸ் என்பவரைத் தோற்கடித்தார் என்பது அவருக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் கௌரவமாகும்.

olympics-athletics-400m-women-miller-gold

400 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் வெற்றி பெற்ற பஹாமாஸ் நாட்டின் மில்லர்…