Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் 200 மீட்டர் : மீண்டும் தங்கத்தை நோக்கி உசேன் போல்ட்!

ஒலிம்பிக்ஸ் 200 மீட்டர் : மீண்டும் தங்கத்தை நோக்கி உசேன் போல்ட்!

657
0
SHARE
Ad

olympics-200 m-Usain bolt-wins heats.jpg-large

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் ஜமைக்காவின் உசேன் போல்ட், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான தகுதிச் சுற்றில் முதலாவதாக வந்ததன் மூலம், மற்றொரு தங்கப் பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை நெருங்கியிருக்கின்றார்.

200 மீட்டருக்கான இறுதிச் சுற்றில், முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தை வென்றால் உசேன் போல்ட் மற்றொரு சாதனைப் பக்கத்தில் இடம் பெறுவார். 2008, 2012, 2016 என வரிசையாக மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஆண்களுக்கான பிரிவில் வரிசையாகத் தங்கம் வென்றுள்ள சாதனையாளராக – இதுவரை யாரும் தொடாத சாதனையை எட்டிப் பிடித்தவராக – அவர் விளையாட்டு வரலாற்றில் தனியிடம் பெறுவார்.