Home உலகம் காங்கிரஸ் பெண்கள் குறித்து இனவெறி பதிவுகள் – டிரம்புக்கு எதிர்ப்புகள் வலுத்தன!

காங்கிரஸ் பெண்கள் குறித்து இனவெறி பதிவுகள் – டிரம்புக்கு எதிர்ப்புகள் வலுத்தன!

788
0
SHARE
Ad

வாஷிங்டன்: ஜனநாயக கட்சியை சேர்ந்த காங்கிரஸ் பெண்களான ரஷிடா தாலிப், ஒகாஸியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்ளி மற்ரும் இல்ஹான் உமர் ஆகியோருக்கு எதிராக இனவெறி பதிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தமது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேரழிவு நாட்டிலிருந்து வந்த ஜனநாயக கட்சியை சேர்ந்த காங்கிரஸ் பெண்கள், உலகத்திலேயே சக்தி மிகுந்த நாட்டின் அரசு எப்படி செயல்பட வேண்டுமென பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்ற தொனியில் டிரம்ப் தமது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அவர் நேரடியாக அவர்களை குறிப்பிட்டவில்லையென்றாலும், மறைமுகமாக தங்களைத்தான் விமர்சிக்கிறார் என்று அவர்கள் அவருக்கு பதிலளித்துள்ளனர்.  அவரின் இக்கருத்துக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.