Home நாடு “மலாய்க்காரர்கள் அல்லாத ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டது தொழில்நுட்ப பிழை!”- சப்ரி யாக்கோப்

“மலாய்க்காரர்கள் அல்லாத ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டது தொழில்நுட்ப பிழை!”- சப்ரி யாக்கோப்

906
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை லெம்பா பாந்தாய் அம்னோ பிரிவின் சந்திப்புக் கூட்டத்தை பதிவு செய்வதிலிருந்து மலாய்க்காரர் அல்லாத நிருபர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொழில்நுட்ப பிழை என்று அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விவரித்தார்.

“சம்பந்தப்பட்ட சபாநாயகர் ஊடகவியலாளர்கள் மீது எந்தவொரு மோசமான எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லைஎன்று சப்ரி கூறினார்.

அந்நிகழ்ச்சி மலாய்க்காரர்களின் மாநாடு என்ற காரணத்தினால் இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டதாகவும், மலாய்க்காரர்கள் மட்டுமே அக்கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

#TamilSchoolmychoice

சபாநாயகர் சரியான விவகாரத்தில் தவறான அனுகுமுறையைக் கையாண்டு உள்ளதால் அது சில ஊடகங்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று சப்ரி குறிப்பிட்டார்.

பொதுவாகவே, பிரதிநிதிகள் அல்லாதவர்கள், பார்வையாளர்கள் அல்லாதவர்கள், அனுமதி அட்டை இல்லாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள், அது ஊடகங்களாக இருந்தாலும் சரி” என்று அவர் விவரித்தார்.