Home நாடு நஜிப்: 2 கடன்பற்று அட்டைகள் வழி ஒரே நாளில் 3.35 மில்லியன் பணம் செலவிடப்பட்டது!

நஜிப்: 2 கடன்பற்று அட்டைகள் வழி ஒரே நாளில் 3.35 மில்லியன் பணம் செலவிடப்பட்டது!

1003
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தனது இரண்டு கடன்பற்று அட்டைகளைப் பயன்படுத்தி இத்தாலியில் உள்ள சுவிஸ் நகை மற்றும் கடிகாரக் கடையில் ஒரே நாளில் 3.35 மில்லியன் ரிங்கிட் பணத்தை செலவிட்டார் என்று அம்பேங்க் குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் (கடன்பற்று அட்டை, அங்கீகாரம் மற்றும் வங்கி மோசடி மேலாண்மை) இயோ எங் லியோங் உயர் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்டு 14-ஆம் தேதி அவர் இந்த செலவுகளை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டு அட்டைகளுக்கும் கடன் வரம்பு 3 மில்லியன் ரிங்கிட் வரை இருந்தன என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று அதாவது ஐந்து நாட்களுக்குப் பிறகு கடன்பற்று அட்டை பரிவர்த்தனைகளுக்கு நஜிப் பணம் செலுத்தியதாக இயோ கூறினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி, அமெரிக்காவின் ஹொனலுலுவில் உள்ள சேனல் கடையில் நஜிப் தனது கடன்பற்று அட்டையை பயன்படுத்தியதாகவும் இயோ கூறினார். சுமார் 466,330.11 ரிங்கிட் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நஜிப்பின் கடன்பற்று அட்டைகள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக ஏதேனும் புகார்கள் அல்லது அறிக்கை வந்திருக்கிறதா என்று துணை அரசு வழக்கறிஞர் புடிமான் லுட்ஃபி முகமட் கேட்டதற்கு, இயோ அவ்வாறான புகார்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று கூறினார். அனைத்து கொடுப்பனவுகளும் 880 என்ற எண்ணுடன் முடிவடையும் நஜிப்பின் அம்பேங்க் வங்கிக் கணக்கிலிருந்து வந்ததாக இயோ கூறினார்.