Home One Line P2 எதிர்ப்புகளைக் கடந்து ‘குயின்’ எனும் ஜெயலலிதாவின் வரலாற்றுத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு!

எதிர்ப்புகளைக் கடந்து ‘குயின்’ எனும் ஜெயலலிதாவின் வரலாற்றுத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு!

252
0
SHARE

சென்னை: பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும்குயின்தொடரின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது. முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் தொடராக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் நடிக்கிறார்.

இந்தத் தொடரின் சில பாகங்களை கிடாரிதிரைப்பட இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்எக்ஸ் பிளேயர் நிறுவனம் தயாரிக்கும் இத்தொடரின் முதல் தோற்றம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.

இந்த தொடரின் முழு முன்னோட்டக் காணொளி வருகிற டிசம்பர் 5-ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்தொடரின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:

Comments