Home நாடு “1எம்டிபி சர்ச்சைகளுக்குக் காரணம் மகாதீர் தான்” – நஜிப் குற்றச்சாட்டு!

“1எம்டிபி சர்ச்சைகளுக்குக் காரணம் மகாதீர் தான்” – நஜிப் குற்றச்சாட்டு!

472
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஜூலை 4 – “துன் மகாதீரின் தனிப்பட்ட தேவைகளையும், கோரிக்கைகளையும் நான் ஏற்கவில்லை. அதன் பிறகே என் மீது 1எம்டிபி குற்றச்சாட்டுகள் எழுந்தன” என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையின் குற்றச்சாட்டுகளுக்குப்  பதில் அளிக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில மாதங்களாகவே என் மீதும், என் குடும்பத்தார் மீதும் வேண்டாத குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும், நான் துன் மகாதீரின் தனிப்பட்ட தேவைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்காதது முதல் தான் உருவாகின. அவரின் ஆளுமையில் பினாமி அரசாகச் செயல்படுவதை நான் விரும்பவில்லை.”

“அப்போது முதல் துன் என் மீது பொறுப்பற்ற முறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். அதில் ஒன்று தான் 1எம்டிபி நிறுவனத்தில் 43 பில்லியன் ரிங்கிட் விடுபட்டுவிட்டதாகக் கூறியது. தற்போது, புதிதாக அரசு சார் நிதியத்தை எனது தனிப்பட்ட தேவைகளுக்காக நான் பயன்படுத்திக் கொண்டேன் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற வேண்டாத குற்றச்சாட்டுகளின் பின்னணியில் துன் மகாதீர் திரை மறைவில் இருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.”

#TamilSchoolmychoice

“இந்த விவகாரங்களில் எனது நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எதிர்க்கட்சிகள் கூறுவது போல் எனது சுயலாபத்திற்காக நான் எந்த ஒரு நிதியையும் எடுக்கவில்லை. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை நீக்குவதற்காகச் சிலர் செய்யும் சதி வேலைகள் தான் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குக் காரணம். தற்போது வரை நாட்டின்  நலனிலும், நாட்டு மக்களின் நலனிலுமே எனது கவனம் முழுவதும் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.