உஃபா, ஜூலை 8 – பிரிக்ஸ் (BRICS) எனப்படும் கூட்டமைப்பு நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷியாவின் உஃபா நகர் சென்று சேர்ந்தார்.
அவர் உஃபா நகர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த காட்சியைக் காட்டும் புகைப்படம் இது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பாகும்.
இந்தக் கூட்டமைப்பின் உச்சநிலைத் தலைவர்களின் மாநாடும், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலைக் கூட்டமும் ரஷியாவின் பாஷ்கோர்தோஸ்தான் மாநிலத்தின் தலைநகர் உஃபாவில் எதிர்வரும் ஜூலை 9, 10ஆம் தேதிகளில் நடைபெறும்.
படம்: EPA