Home உலகம் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷியா சென்றார் மோடி!

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷியா சென்றார் மோடி!

670
0
SHARE
Ad

உஃபா, ஜூலை 8 – பிரிக்ஸ் (BRICS) எனப்படும் கூட்டமைப்பு நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷியாவின் உஃபா நகர் சென்று சேர்ந்தார்.

Modi-Ufa-Russia-BRICS-Summitஅவர் உஃபா நகர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த காட்சியைக் காட்டும் புகைப்படம் இது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பாகும்.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டமைப்பின் உச்சநிலைத் தலைவர்களின் மாநாடும், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலைக் கூட்டமும் ரஷியாவின் பாஷ்கோர்தோஸ்தான் மாநிலத்தின் தலைநகர் உஃபாவில் எதிர்வரும் ஜூலை 9, 10ஆம் தேதிகளில் நடைபெறும்.

படம்: EPA