உஃபா, ஜூலை 9 – ரஷியாவின் உஃபா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா,சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய கூட்டமைப்பு நாடுகளின் உச்சநிலை மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டமைப்பின் உச்சநிலைத் தலைவர்களின் மாநாடும், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலைக் கூட்டமும் ரஷியாவின் பாஷ்கோர்தோஸ்தான் மாநிலத்தின் தலைநகர் உஃபாவில் இன்று தொடங்கியது.
மாநாட்டின் கண்கவர் புகைப்படங்களில் சில, உங்களின் பார்வைக்கு இதோ கீழே பதிவு செய்யப்படுகின்றன. கண்டு களியுங்கள்!
(மாநாட்டு மேடையில் பிரேசில் அதிபர் தில்மா ரோஸெஃப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜகோப் ஜூம்மா)
(மகிழ்ச்சியான தருணத்தில் பிரேசில் அதிபர் தில்மா ரோஸெஃப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்)
( இந்தியப் பிரதமரை அமரச் சொல்லி அன்புடன் அழைக்கும் ரஷ்ய அதிபர் புதின். அருகில் புன்னகையுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்)
( இந்தியப் பிரதமர் மோடியின் பேச்சிற்கு உன்னிப்பாகச் செவிமடுக்கும் பிரேசில் அதிபர் தில்மா ரோஸெஃப், ரஷ்ய அதிபர் புதின்.
கீழே புன்முறுவலுடன் அமர்ந்திருப்பவர் இந்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, கூர்மையான பார்வையுடன் அமர்ந்திருப்பவர் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கை லவ்ரோவ்)
( இப்படத்தில் ரஷ்ய அதிபர் பேசுவதை உற்றுக் கவனிக்கும் இந்தியப் பிரதமர் மோடி. அவருக்குப் பின்னால் புன்னகையுடந் காட்சி தருவது தென் ஆப்பிரிக்க அதிபர் ஜகோப் ஜூம்மா)
(ரஷ்ய அதிபர் புதின், சீரிய உரையாற்றுகிறார்)
(மாநாட்டிற்கு வருகை தரும் பாகிஸ்தான் பிரதமர் முகமது நவாஸ் ஷெரீப்பிற்கு உரிய மரியாதையுடன் வரவேற்பளிக்கப்படுகிறது)
படங்கள் :EPA