Home நாடு நஜிப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கவில்லை: அவை முன்கூட்டியே மூடப்பட்டுவிட்டன

நஜிப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கவில்லை: அவை முன்கூட்டியே மூடப்பட்டுவிட்டன

505
0
SHARE
Ad

Najib 1MDBகோலாலம்பூர், ஜூலை 10 – 1எம்டிபி பணப் பரிமாற்றத்தில் தொடர்புள்ள பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டதாக வெளியான தகவல் சரியல்ல. அக்கணக்குகள் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன.

பணப் பரிமாற்றத்தில் தொடர்புடைய அவ்விரு வங்கிக் கணக்குகளும் கடந்த 2013 ஆகஸ்ட் 30, மற்றும் நடப்பாண்டின் மார்ச் 9ஆம் தேதிகளில் மூடப்பட்டுள்ளன. எனினும் பணப் பரிமாற்றம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு நடவடிக்கைக் குழு, அவ்விரு வங்கிக் கணக்குகள் தொடர்பிலான அனைத்து ஆவணங்களையும் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த விவகாரம் தொடர்பில் அட்டர்ஜி ஜெனரல் அலுவலகத்தில் உள்ள அனைத்து விசாரணை ஆவணங்களும் சிறப்பு நடவடிக்கைக் குழுவிடம் இருந்தே பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எனவே வால் ஸ்டிரீட் ஜெர்னல் பத்திரிகையிடம் இருந்தோ, அல்லது வேறு தரப்பிலிருந்தோ பெறப்பட்ட ஆவணங்களை ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் பயன்படுத்துவதாகக் கூறுவது சரியல்ல,” என்று சிறப்பு நடவடிக்கைக் குழு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் பொருட்டு 1எம்டிபி அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது குறித்தும், அச்சமயம் பல்வேறு முக்கிய ஆவணங்கள், வங்கி அறிக்கைகள், தொழில் நிமித்தமான ஒப்பந்தங்களின் பிரதிகள், மடிக்கணினிகள் எனப் பலவற்றைப் பறிமுதல் செய்தது குறித்தும், அட்டர்னி ஜெனரல் டான்ஷ்ரீ அப்துல் கனியிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆறு வங்கிக் கணக்குகளைச் சிறப்பு நடவடிக்கைக் குழு முடக்கியுள்ள நிலையில், 1எம்டிபியின் நிதியை வைத்து மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்றம் தொடர்பில் 17 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.