பட்டர்வொர்த், ஜூலை 10 – மசூதி ஒன்றின் மீது பன்றி இறைச்சியை வீசியவருக்கு நீதிமன்றம் 3 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.
லீ டியான் சோங் (41 வயது) என்ற அந்த ஆடவர், தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி முன்னிரவு சுமார் 1.30 மணியளவில், தெலகா ஆயர் மசூதி மீது, பன்றி இறைச்சி உள்ள ஒரு உறையை வீசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
குறிப்பிட்ட மதத்தையும், வழிபாட்டு இடத்தை இழிவுபடுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டதாக குற்றவியல் பிரிவு 295ன் கீழ் குற்றம்சாட்ட நிலையில், நீதிமன்றத்தில் அவர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இத்தகைய குற்றத்திற்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிகிக்கப்படச் சட்டம் வழிவகை செய்கிறது. இந்நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்ட போது லீ நீதிமன்றத்தில் இல்லை. எனினும் அவரது தண்டனைக் காலம் தீர்ப்பு வழங்கப்பட்டது முதற்கொண்டே தொடங்குவதாக நீதிபதி அறிவித்தார்.