Home இந்தியா ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை கேட்பது நாகரிகமல்ல- தா.பாண்டியன்.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை கேட்பது நாகரிகமல்ல- தா.பாண்டியன்.

522
0
SHARE
Ad

pandian_jpg_1617351gபுதுக்கோட்டை, ஜூலை 12- முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நலமில்லை என்கிற செய்தி தீயாய்ப் பரவி, இப்போது பற்றிக் கொண்டு எரிகிறது.

ஜெயலலிதா தனது உடல் நிலை குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக தொடங்கி, திருமாவளவன் வரை கேட்கிறார்கள்.

இந்நிலையில், முதல்வரின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறுவது அரசியல் நாகரிகம் அல்ல என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் முதல்வரின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதைப் பார்க்கிறேன். உடல் நிலை குறித்து விசாரிக்கலாம். ஆனால், என்ன நோய் உள்ளது என்று அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறுவது அரசியல் நாகரிகம் அல்ல” என்றார்.