Home தொழில் நுட்பம் கூகுள் கண்ணாடி இருந்தால் இனி கைகளாலே புகைப்படம் எடுக்கலாம்!

கூகுள் கண்ணாடி இருந்தால் இனி கைகளாலே புகைப்படம் எடுக்கலாம்!

595
0
SHARE
Ad

google_647_071115034010கோலாலம்பூர், ஜூலை 13 – இயக்குனர்-நடிகர் பாக்யராஜ் ‘இயக்குனர் பார்வைக்காக’ (Director View) கைகளை உயர்த்திக் காட்டுவாரே, அதேபோன்று செய்தால் போதும், கூகுள் கண்ணாடிகள் இனி தானாகவே புகைப்படம் எடுத்துவிடும். கூகுள் கண்ணாடிகளின் முந்தைய பதிப்பு ஆரம்பத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தினாலும், சில குறைபாடுகளால் பெரிய அளவில் வர்த்தகத்தைக் கொடுக்கவில்லை. எனினும், தனது முயற்சிகளை கைவிடாத கூகுள், கூகுள் கண்ணாடிகளின் அடுத்த பதிப்பிற்கு தயாராகி விட்டது.

இந்த புதிய பதிப்பில் அசைவுகள் அங்கீகரிக்கும் ‘கெஸ்க்ஷர் ரிகக்னைசன்’ (gesture recognition) தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் கைகளாலே புகைப்படத்திற்கான கோணம் மற்றும் ‘ஃப்ரேம்’ (Frame)-ஐ உருவாக்க வேண்டும். புகைப்படம் எடுக்க வேண்டிய இடத்தையோ பொருளையோ அந்த ஃப்ரேமில் நிறுத்திவிட்டு ‘ஓகே கிளாஸ், டேக் எ பிக்ஸர்’ (Ok Glass, take a picture) கூறினால் போதும், கூகுள் கண்ணாடிகள் தானாகவே அந்த ஃப்ரேமில் இருப்பதை புகைப்படம் எடுத்துவிடும்.

fast-talk-61-Mistry-2                                                                இந்தியர் பிரணவ் மிஸ்ட்ரி

#TamilSchoolmychoice

இதில் மற்றொரு வசதி என்னவென்றால், நமது கைகளால் உருவாக்கப்படும் ஃப்ரேம்களின் வடிவத்திற்கு தகுந்தவாறு போல், புகைப்படங்களின் வடிவமும் மாறுபடும். உதாரணமாக நமது கைகளால் வட்ட வடிவில் ஃப்ரேம்களை உருவாக்கினால், புகைப்படமும் வட்ட வடிவில் தான் தோன்றும்.

கூகுளுக்கு இந்த புதிய யோசனை உருவாகக் காரணமே இந்தியர் ஒருவரின் கண்டுபிடிப்பு தான் என்பது ஆச்சரியமூட்டும் தகவலாகும். இத்தகைய தொழில்நுட்பத்தை ‘சிக்ஸ்த் சென்ஸ்’ (Sixth Sense) என்ற பெயரில் பிரணவ் மிஸ்ட்ரி பல வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளார். எனினும், கூகுள் இந்த தொழில்நுட்பத்திற்காக அவரிடம் உரிமம் பெற்றுள்ளதா? அவர் இதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா? என்பது இன்னும் தெளிவாகவில்லை.