Home இந்தியா சிறையில் பேரறிவாளனுடன் இயக்குநர் ஜனநாதன் சந்திப்பு

சிறையில் பேரறிவாளனுடன் இயக்குநர் ஜனநாதன் சந்திப்பு

649
0
SHARE
Ad

janaவேலூர், ஜூலை 17-  வேலூர் சிறையில் உள்ள ராஜீவ்காந்தி கொலையாளி பேரறிவாளனை, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் சென்று திரைப்பட இயக்குநர் ஜனநாதன் சந்தித்துப் பேசினார்.

பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று நோயால் அவதிப்பட்டதால், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. அதற்காக அவர் சிறப்பு அனுமதி பெற்றுப் புழல் சிறையில் இருந்து சிகிச்சை பெற்றார். சிக்கிச்சை முடிந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,.மரண தண்டனையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘புறம்போக்கு’ படத்தை இயக்கிய இயக்குநர் ஜனநாதன் நேற்று பேரறிவாளனைச் சந்தித்துப் பேசினார்.

#TamilSchoolmychoice

அப்போது ஜனநாதனிடம் பேரறிவாளன்,”புறம்போக்குப் படம் மரண தண்டனை நியாயமானது என்று இதுவரை நினைத்திருந்த பலரது மன நிலையை மாற்றி இருக்கிறது. இரண்டு வருடத்துக்கு முன்பு இந்தப் படம் வந்திருந்தால் எனக்கு உதவியாக இருந்திருக்கும்” என்றாராம்.

“இப்போது பேரறிவாளனைச் சந்திக்க வந்ததன் காரணம் என்ன?” எனக் கேட்டதற்கு “மனிதாபிமான அடிப்படையில் சந்திக்க வந்தேன். புறம்போக்கு படத்தின் நாயகன் போன்றவர் பேரறிவாளன். எனவே, அவரது உடல்நலம் பற்றி நலம் விசாரிக்க வந்தேன். வேறெந்தக் காரணமும் இல்லை” என்றார் ஜனநாதன்.