சுங்கை பூலோ, ஜூலை 19 – தஞ்சோங் காராங் படகு விபத்தில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று சுங்கை பூலோவில் உள்ள அவர்களின் இல்லத்திற்கு, மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் வருகை தந்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
விபத்தில் காலமானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாடும் சுப்ரா.அருகில் (வலது) கோலசிலாங்கூர் மஇகா தொகுதித் தலைவர் ஜீவா.
குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் அந்தக் குடும்பத்தினருக்கு தனது தனிப்பட்ட நிதி உதவியையும் சுப்ரா வழங்கி ஆறுதல் கூறினார்.
#TamilSchoolmychoice
இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க இது போன்ற பயணங்களில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தஞ்சோங் காராங் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லத்தில் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் சுப்ரா…