Home இந்தியா 16 சிறுமிகளை சீரழித்துக் கொன்ற கொடூரன்  – டில்லியில் பயங்கரம்!

16 சிறுமிகளை சீரழித்துக் கொன்ற கொடூரன்  – டில்லியில் பயங்கரம்!

556
0
SHARE
Ad

delhi12 புது டெல்லி, ஜூலை 20 – கடந்த 14-ம் தேதி, டில்லியின் வடமேற்கு பகுதியில், 6 வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகக் கூறி ரவீந்தர் குமார் (24) என்பவனை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினர் அவனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமிகளின் கடத்தல் தொடர்பாக ரவீந்தர் காவல்துறையினருக்கு அளித்த தகவல் படி, சிறுமிகளுக்கு இனிப்பு மற்றும் பணம் கொடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும், சடலங்களை கண்டுபிடிக்காமல் இருக்க கழிவு நீர் மற்றும் மண்ணில் போட்டு புதைத்து விட்டதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.

இந்த கொலைபாதகச் செயலை, அவன் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தொடர்ந்து செய்து வந்துள்ளான். கடைசியாக அவனை, காவல்துறையினர், 6-வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

நொய்டா மற்றும் அலிகார்க் பகுதிகளில் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்த அவன், பதான் மாவட்டத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 6 கொலைகளில் குமாருக்கு தொடர்பு உள்ளதை காவல்துறையினர் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலையில், சிறுமிகள் மாயமானது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இருக்கும் உறவினர்களிடம் இருந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் முழுவிவரம் கூடிய சீக்கிரம் வெளியாகும் என்றும் காவல்துறையி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், 16 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள விவகாரம், பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. குற்றங்களை சர்வ சாதாரணமாக செய்துவிட்டு சராசரி மனிதன் போல், ஒருவன் நடமாடிக் கொண்டிருந்தது காவல்துறை மீது பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.