Home உலகம் 54 வருடங்கள் கழித்து வாஷிங்டனில் கியூபா தூதரகம் திறப்பு!

54 வருடங்கள் கழித்து வாஷிங்டனில் கியூபா தூதரகம் திறப்பு!

615
0
SHARE
Ad

cubaவாஷிங்டன், ஜூலை 20 – வாஷிங்டனில் ஏறக்குறைய 54 வருடங்கள் கழித்து, இன்று கியூபா நாட்டின் தூதரகம் திறக்கப்பட்டு அந்நாட்டின் கொடி ஏற்றப்பட்டது. இதன் மூலம் பரம எதிரிகளாக இருந்து வந்த அமெரிக்காவும், கியூபாவும் சமரச புரிந்துணர்வுகளுக்கான முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்துள்ளன.

1961-ம் ஆண்டுக்கு பிறகு தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது பற்றி அமெரிக்காவிற்கான கியூபா தூதர் ஜோஸ் ரமோன் கபனாஸ் கூறுகையில், “இரு நாட்டு உறவுகளையும் கொண்டாட இது சரியான தருணம். தூதரகம் திறக்கப்பட்ட அந்த தருணத்தில் இரு நாடுகளுக்கும் இதுநாள் வரை இருந்து வந்த வரலாற்றினை நினைவு கூர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு உறவின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, கியூபா வெளியுறவுத் துறை அமைச்சரான புருனோ ரோட்ரிக்ஸை அமெரிக்காவிற்கு வரவேற்பார் என தெரியவருகிறது.

#TamilSchoolmychoice

கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்காவும்  கியூபாவும் வரலாற்றுப் பகையை மறந்து சமரச பேச்சுவார்த்தையை துவக்கின. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம், பனாமாசிட்டியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவும் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டனர்.

இரு நாடுகளின் உறவு இனி எப்படி இருக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைகள் அனைத்து சரியான பாதையில் பயணித்ததால், 50 ஆண்டுகாலப் பகை மறந்து, புதிய நட்பு மலர்ந்தது. கியூபாவை தீவிரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து ஒபாமா நீக்கினார். கியூபாவும், தனது தூதரகத்தை அமெரிக்காவில் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தது. விரைவில் இரு நாடுகளின் அதிபர்களும், அரசு ரீதியான சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.