Home நாடு தஞ்சோங் காராங் படகு விபத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு டாக்டர் சுப்ரா ஆறுதல்!

தஞ்சோங் காராங் படகு விபத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு டாக்டர் சுப்ரா ஆறுதல்!

526
0
SHARE
Ad

சுங்கை பூலோ, ஜூலை 19 – தஞ்சோங் காராங் படகு விபத்தில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று     சுங்கை பூலோவில் உள்ள அவர்களின் இல்லத்திற்கு, மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ  டாக்டர் ச.சுப்ரமணியம் வருகை தந்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Dr subra-speaking to reporters-tg karang victims visit-விபத்தில் காலமானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த பின்னர்     பத்திரிக்கையாளர்களிடம் உரையாடும் சுப்ரா.அருகில் (வலது)    கோலசிலாங்கூர் மஇகா தொகுதித் தலைவர் ஜீவா.

குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் அந்தக் குடும்பத்தினருக்கு   தனது தனிப்பட்ட நிதி உதவியையும் சுப்ரா வழங்கி ஆறுதல் கூறினார்.

#TamilSchoolmychoice

இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க இது போன்ற    பயணங்களில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Dr Subra-visit tanjong karang boat victims family

தஞ்சோங் காராங் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின்           இல்லத்தில் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் சுப்ரா…