Home இந்தியா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோ-வைச் சந்தித்தார் கருணாநிதி!

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோ-வைச் சந்தித்தார் கருணாநிதி!

536
0
SHARE
Ad

karunanidhi-meetசென்னை, ஜூலை 20- உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ-வைத் திமுக தலைவர் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சோ, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். அதேசமயம் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நடவடிக்கைகளை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்பவரும் ஆவார்.

அதனால், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பரபரப்புக்குள்ளானதாகவும் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

தைராய்டு பிரச்னைக்காகச் சிகிச்சை பெறும் திமுக பாராளுமன்ற உறுப்பினரும் தன் மகளுமான கனிமொழியைச் சந்திக்கக் கருணாநிதி, மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, அதே மருத்துவமனையில் சோ சிகிச்சை பெற்று வருவதாகக் கேள்விப்பட்டு, அவர் சிகிச்சை பெறும் அறைக்குச் சென்று சோவைச் சந்தித்தார் கருணாநிதி.

அவரது உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவரிடம் கேட்டறிந்தார். அந்தச் சந்திப்பு சுமார் 10 நிமிடம்  நீடித்தது.