Home உலகம் கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகம் பிரான்ஸ் அனுப்பப்படுகிறது – நஜிப்

கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகம் பிரான்ஸ் அனுப்பப்படுகிறது – நஜிப்

1088
0
SHARE
Ad

MH370

கோலாலம்பூர், ஜூலை 30 – “ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகம், பிரான்ஸின் டுலூஸ் பகுதிக்கு, ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது” என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகம், போயிங் 777 ரக விமானங்களின் பாகமாக இருக்கலாம் என்று ஆருடங்கள் கூறப்பட்டாலும், அது எம்எச்370 விமானத்தினுடையது தான் என்பதை உறுதியாகக் கூறமுடியாது. இது தொடர்பான முடிவுகளை விரைவில் கண்டுபிடிப்பதற்காக, குறிப்பிட்ட அந்த பாகம், பிரான்ஸின் டுலூஸ் பகுதிக்கு, பிரஞ்சு அதிகாரிகள் எடுத்துச் செல்ல இருக்கின்றனர். அங்கு தான், சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு அலுவலகம் உள்ளது.”

#TamilSchoolmychoice

“பிரெஞ்சு அதிகாரிகள் குழுவிற்கு உதவுவதற்காக, மலேசிய விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் குழுவும் டுலூஸ் பகுதிக்கு விரைகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.