Home Featured நாடு “நஜிப்பை கைது செய்யுங்கள்” பேரணி: 29 பேர் கைது (படக் காட்சிகளுடன்)

“நஜிப்பை கைது செய்யுங்கள்” பேரணி: 29 பேர் கைது (படக் காட்சிகளுடன்)

714
0
SHARE
Ad

#TangkapNajib (Arrest Najib) Rally In Malaysiaகோலாலம்பூர், ஆகஸ்ட்  1 – “நஜிப்பைக் கைது செய்யுங்கள்” என்ற தலைப்பில் சோஹோ வணிக வளாகம் முன்பு நடைபெற்ற கண்டனப் பேரணி தொடர்பில் இதுவரை 29 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக கூடியதன் பேரில் குற்றவியல் சட்டம் 143ஆவது பிரிவின் கீழ் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட உள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய குற்றத்திற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

#TangkapNajib (Arrest Najib) Rally In Malaysiaநாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட குற்றச்சாட்டுக்காகவும் 29 பேரிடம் விசாரணை நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மொத்தம் 23 ஆடவர்களும், 6 பெண்களும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ தாஜுடின் முகமட் ஈசா கூறியுள்ளார்.

#TangkapNajib (Arrest Najib) Rally In Malaysia“கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணையின் பொருட்டு காவலில் தடுத்து வைக்கப்படுவர். பேரணி தொடர்பில் காவல்துறை நிபுணத்துவத்துடனும் சட்டப்படியும் செயல்பட்டுள்ளது” என அறிக்கை ஒன்றில் தாஜுடின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சோஹோ வணிக வளாகத்தின் முன்பு இன்று சனிக்கிழமை மாலை 2 மணி அளவில் குறிப்பிட்ட அந்தப் பேரணி தொடங்கிய சில நிமிடங்களில் அதில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் அடுத்தடுத்து கைது செய்ததால் அங்கு குழப்பம் நிலவியது.

கைது செய்யப்பட்டவர்களில் தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லிக் காங் மற்றும் சிப்பாங் சட்டமன்ற உறுப்பினர் டான் கர் ஹிங் ஆகியோரும் அடங்குவர்.

#TangkapNajib (Arrest Najib) Rally In Malaysia

#TangkapNajib (Arrest Najib) Rally In Malaysia

படங்கள்: EPA