Home Featured தமிழ் நாடு தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் – அதிர்ச்சி தரும் சுப்ரமணிய சாமி!

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் – அதிர்ச்சி தரும் சுப்ரமணிய சாமி!

746
0
SHARE
Ad

isis-flag (1)சென்னை, ஆகஸ்ட் 2 – தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்  ஊடுருவி விட்டதாக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதிரடிக்கும், பரபரப்பிற்கும் எப்போதும் பஞ்சமில்லாதக வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் சுப்ரமணிய சாமி, தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் பற்றி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவிவிட்டது. இதற்கு எல்டிடிஇ-ன் ஆதரவு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “இறுதியாக நமது அரசு, ஐஎஸ்ஐஎஸ் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ள ஆரம்பித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை, இந்தியாவில் இருந்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமானால், ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழகத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேலுடன் இந்தியா இணைந்து இதை செயல்படுத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.