Home Featured தமிழ் நாடு “ரஜினியை அரசியலில் இருந்தே விரட்டியடிக்கும் தகவல்களை வெளியிடுவேன் – சுப்ரமணிய சுவாமி எச்சரிக்கை

“ரஜினியை அரசியலில் இருந்தே விரட்டியடிக்கும் தகவல்களை வெளியிடுவேன் – சுப்ரமணிய சுவாமி எச்சரிக்கை

1344
0
SHARE
Ad

புதுடில்லி – நேற்று சனிக்கிழமை இரவு இந்தியாவின் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகமான ‘இந்தியா டுடே’ அலைவரிசையில், ரஜனியின் அரசியல் பங்கேற்பு குறித்து நடத்தப்பட்ட ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி, நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கடுமையான சில கருத்துகளை முன்வைத்தார்.

பாஜகவின் மற்ற தலைவர்கள் அனைவரும் ரஜினியை அரசியலில் வரவேற்றுக் கொண்டிருக்கும் வேளையில், சுப்ரமணிய சுவாமி மட்டும், ரஜினியின் அரசியல் பிரவேசத்தைக் கடுமையாகத் தாக்கி கண்டனம் தெரிவித்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

தனது படங்கள் தோல்வியைத் தழுவி வருவதால்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று தெரிவித்த சுவாமி, “ரஜினி சம்பந்தப்பட்ட சில பணவிவகார மோசடிகள் குறித்த தகவல்கள் என்னிடம் உள்ளன. அவற்றை நான் வெளியிட்டால், ரஜினி அரசியலில் இருந்தே விரட்டப்படுவார். ஆனால் அவற்றை நான் இப்போது வெளியிட மாட்டேன். ரஜினி அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்குள் வந்தால், அவற்றை நான் வெளியிடுவேன்” என எச்சரித்துள்ளார்.

ரஜினிக்கு அரசியல் அனுபவம் போதாது என்றும் சுட்டிக் காட்டிய சுவாமி, ஜெயலலிதா நிறையப் படித்த அறிவாளி என்பதால்தான் அரசியலில் பிரகாசித்தார் என்றும் ரஜினி தன் வாழ்நாளில் ஒரு புத்தகத்தைக் கூட முழுமையாகப் படித்திருக்க மாட்டார் என்றும் சாடினார்.