இவர்கள் அனைவரும் கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக கூடியதன் பேரில் குற்றவியல் சட்டம் 143ஆவது பிரிவின் கீழ் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட உள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய குற்றத்திற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
மொத்தம் 23 ஆடவர்களும், 6 பெண்களும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ தாஜுடின் முகமட் ஈசா கூறியுள்ளார்.
முன்னதாக சோஹோ வணிக வளாகத்தின் முன்பு இன்று சனிக்கிழமை மாலை 2 மணி அளவில் குறிப்பிட்ட அந்தப் பேரணி தொடங்கிய சில நிமிடங்களில் அதில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் அடுத்தடுத்து கைது செய்ததால் அங்கு குழப்பம் நிலவியது.
கைது செய்யப்பட்டவர்களில் தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லிக் காங் மற்றும் சிப்பாங் சட்டமன்ற உறுப்பினர் டான் கர் ஹிங் ஆகியோரும் அடங்குவர்.
படங்கள்: EPA