Home உலகம் ஜெட் விமான விபத்தில் ஒசாமாவின் வளர்ப்புத் தாய், தங்கை பலி!

ஜெட் விமான விபத்தில் ஒசாமாவின் வளர்ப்புத் தாய், தங்கை பலி!

510
0
SHARE
Ad

jetflightஹேம்ப்ஷயர், ஆகஸ்ட் 2 – இங்கிலாந்தின் ஹேம்ப்ஷயர்  பகுதியில், நேற்று முன்தினம் நடந்த தனியார் ஜெட் விமான விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர். இந்நிலையில், சவூதியின் பதிவு எண் கொண்ட அந்த விமானத்தில் பயணித்த நால்வரும், மறைந்த அல்கொய்தா  இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் உறவினர்கள் என்று தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, பிளாக்புஷ் விமான நிலையத்தின் அருகே, தனியாருக்குச் சொந்தமான விமானம், மேலெழும்பிய சில நொடிகளில், கார்கள் ஏலம் விடும் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில், விமானப் பயணிகள் 4 பேர் பலியாகினர். காவல்துறையினர் விபத்து பற்றி நடத்திய விசாரணையில், அவர்கள் ஒசாமாவின் உறவினர்கள்  என்று தெரியவந்துள்ளது.

இறந்தவர்கள் பற்றி விசாரணை நடத்துமாறு சவூதி அரேபியா அரசு, இங்கிலாந்தில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. சவூதி அரேபியா தூதரும், இறந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். எனினும், இறந்தவர்கள் ஒசாமாவின் உறவினர்களா? என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இறந்தவர்களின் குடும்ப நண்பர், இறந்தவர்களின் அடையாளங்களைக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அதன்படி, நால்வரும் ஒசாமாவின் வளர்ப்புத் தாய், தங்கை, தங்கையில் கணவர் என்று தெரியவந்துள்ளது. விமானத்தை ஓட்டிய விமானியும், இவர்களின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

எனினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.